Also Watch
Read this
By: Manigandan Raja

எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்குப் பார்வைத்திறன் பாதிப்பு
அதிகப்படியான பிரகாசமான low beam முகப்பு விளக்குகள் காரணமாக, டெஸ்லா நிறுவனம் 20,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க வாகனங்களைத் திரும்பப் பெற உள்ளது .
இந்த வாகனங்களின் ' low-beam முகப்பு விளக்குகள் அளவுக்கு அதிகமாகப் பிரகாசமாக இருப்பதால், எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்குப் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலைப் போக்குவரத்துப் பாதுகாப்பு நிர்வாகம் தெரிவித்தது.
சிரிய முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை
போர் குற்றம் மற்றும் மனித உரிமை மீறலுக்கு எதிரான குற்றங்களில் சிரியா முன்னாள் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டு போர் 2024 ஆம் ஆண்டு வரை நீடித்தது. அச்சமயம் அரசுக்கு எதிராக போராடியவர்கள் மீது வன்முறையை ஏவி லட்சக்கணக்கானோரை கொன்று குவித்தது.

இதுதொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், பஷார் அல் ஆசாத்துக்கும், அவரது சகோதரரும் முன்னாள் ராணுவ தலைமை அதிகாரியுமான மஹர் அல் ஆசாத்துக்கும் மரண தண்டனை விதித்துள்ளது.
உக்ரேனிய நகரமான ஜபோரிஜியாவில் தாக்குதல்
தென்கிழக்கு உக்ரேனிய நகரமான ஜபோரிஜியாவில் வட கொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டதாக அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.

மேலும், இரவு நேரத்தில் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் ஆகிய உக்ரேனியப் பகுதிகளில் ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும், தலைநகர் கீவ் மீது நடத்தப்பட்ட ரஷ்யத் தாக்குதலால் அங்கு தீ விபத்துகள் ஏற்பட்டதாகவும் உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved