news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews புகழ்பெற்ற லா டொமாட்டினா தக்காளி திருவிழா
tv

Also Watch

புகழ்பெற்ற லா டொமாட்டினா தக்காளி திருவிழா

165 டன் தக்காளி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தக்காளி திருவிழா

ஒருவருக்கொருவர் தக்காளிகளை வீசி மகிழ்ச்சி 

ஸ்பெயினின் புனோல் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற லா டொமாட்டினா தக்காளி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஆண்டு சுமார் 22 ஆயிரம் பேர் பங்கேற்று, ஒருவருக்கொருவர் 150 முதல் 165 டன் தக்காளிகளை வீசி மகிழ்ந்தனர்.

ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த வித்தியாசமான கொண்டாட்டத்தில், நகரமே தக்காளி சாறாலால் சிவப்பு நிறமாக மாறியது.

தென்கொரியாவில் 3 நாட்களில் அடுத்தடுத்து 4 சடலம் மீட்பு

தென்கொரியாவில் ஹனிமூன் சொர்க்கம் என்று அழைக்கப்படும் பிரபல சுற்றுலாத் தலமான ஜெஜூ தீவில், 3 நாட்களில் 4 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் தொடர் கொலையாளி செயல்படுகிறாரா அல்லது கடத்தல் கும்பல் ஏதேனும் செயல்படுகிறதா? என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.

காணாமல் போனவர்கள் பற்றி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தும், விசாரணை செய்யாமலேயே வழக்கை முடித்து வைத்தது அம்பலமாகி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த அதிபர் லீ ஜே-மியோங் உத்தரவிட்டுள்ளார்.

ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

ரஷ்யாவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 9 பேரை காணவில்லை. மேலும், படுகாயமடைந்த 152 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரஷ்யாவின் கிழக்கு பகுதியான அமுர் வட்டாரத்தில் உள்ள இந்த ஆலை, உலகிலேயே மிகப்பெரிய பிளாஸ்டிக் உற்பத்தி வளாகம் என கூறப்படுகிறது.

இந்த ஆலையானது ரஷ்ய நிறுவனமான சிபுர், சீன எண்ணெய், எரிவாயு நிறுவனமான சைனோபேக் ஆகியவை இணைந்து உருவாக்கியது. இந்த ஆலையில் விரைவில் உற்பத்தி தொடங்கவிருந்த நிலையில், தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

Related Link
கும்பகோணம் TO நேபாளம், அதிர்ச்சியில் முடிந்த யாத்திரை

கும்பகோணம் TO நேபாளம், அதிர்ச்சியில் முடிந்த யாத்திரை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'டாக்சிக்' திரைப்படம் முதல் நாளிலேயே ரூ.60 கோடி வசூலித்து வரலாற்று சாதனை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved