Also Watch
Read this
By: Manigandan Raja

இருநாடுகளுக்கும் இடையிலான அலுவலகத்தை தகர்த்த வழக்கில் தீர்ப்பு
இரு கொரிய நாடுகளுக்கு இடையிலான தொடர்பு அலுவலகத்தை தகர்த்த வழக்கில் வடகொரியாவிற்கு சுமார் 311 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக தென்கொரிய நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இரு நாடுகளில் எல்லையில் இருந்த கேசோங் அலுவலகத்தை கடந்த 2020 ஆம் ஆண்டில் வடகொரியா வெடிகுண்டுகள் வைத்து தகர்த்தது. இதுகுறித்த வழக்கில் சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், வடகொரியாவிற்கு எதிராக தென்கொரியா தொடுத்த முதல் வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹெலிகாப்டர் விபத்து
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாட்ஸ்வொர்த் (Chatsworth) பகுதியில், நிகழ்ந்த ஒரு பேருந்து விபத்தை நேரலை செய்துகொண்டிருந்த செய்தி நிறுவனத்தின் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 4 வாகனங்கள் மற்றும் 2 சேமிப்புக் கொள்கலன்கள் தீக்கிரையாகின.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved