news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஐநா பொதுசபை கூட்டத்தில் ரீல்ஸ் பார்த்த சிரியா அதிபர்
tv

Also Watch

ஐநா பொதுசபை கூட்டத்தில் ரீல்ஸ் பார்த்த சிரியா அதிபர்

ரெசப் தயீப் எர்டோகன்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Reels watch

துருக்கி அதிபர் எர்டோகன் உரையாற்றும்போது ரீல்ஸ் பார்த்தார்

ஐநா பொதுசபை கூட்டத்தில், துருக்கி அதிபர் உரையாற்றும்போது சிரியா அதிபர் ரீல்ஸ் பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் துருக்கி அதிபர் ரெசப் தயீப் எர்டோகன், பாலஸ்தீன விவகாரம் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து உரையாற்றினார்.

அப்போது, சிரியா அதிபர் அல் ஷரா செல்போனில் ரீல்ஸ் வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்ததை அவையில் இருந்த மற்றொரு நபர் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

ஆக்கிரமிப்பு காஷ்மீரை இடுகாடாக மாற்ற பாகிஸ்தான் முயற்சி

ஆக்கிரமிப்பு காஷ்மீரை இடுகாடாக மாற்ற பாகிஸ்தான் முயற்சிப்பதாக ஐ.நா.வில் காஷ்மீரை சேர்ந்த சமூக ஆர்வலர் தஸ்லீமா அக்தர் குற்றம்சாட்டி உள்ளார். ஜெனிவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பேசிய அவர், காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்து இடுகாடாக மாற்ற முயன்று வரும் பாகிஸ்தான், தற்போது ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் அப்பாவி எதிர்ப்பாளர்களை கொன்று குவித்து வருவதாக குற்றம்சாட்டினார்.

மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு மக்களின் உண்மையான பிரதிநிதிகள் யாரும் ஐநாவில் அனுமதிக்கப்படவில்லை எனவும் கூறினார்.

இந்தியா-மேற்காசியா-ஐரோப்பா வழித்தடத்திற்கு டிரம்ப் ஆதரவு

ஈரானிய பகுதிகளைத் தவிர்க்க இந்தியா-மேற்காசியா-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரவு அளித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் மற்றும் அரபு நாடுகளின் தலைவர்களுடனான கூட்டத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

Related Link
நந்தமுரி பாலையா நடித்த படக் காட்சியை வைத்து கிண்டல்

நந்தமுரி பாலையா நடித்த படக் காட்சியை வைத்து கிண்டல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரூ.111 கோடி வசூலித்த சூரியின் மண்டாடி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved