news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews பிரதமர் மோடிக்கு எதிராக சர்வதேச அளவில் சதி நடக்கிறது
tv

Also Watch

பிரதமர் மோடிக்கு எதிராக சர்வதேச அளவில் சதி நடக்கிறது

முக்கியத்துவம் வாய்ந்த நாடு

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பிரதமர் மோடி

செர்பியாவின் முன்னாள் அதிபர் அலெக்சாண்டர் வுசிக் பரபரப்பு

  • பிரதமர் மோடியின் செல்வாக்கைக் குறைக்க சர்வதேச அளவில் சதி நடப்பதாக செர்பியாவின் முன்னாள் அதிபர் அலெக்சாண்டர் வுசிக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். பிரதமர் மோடி அரசு பதவியில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதற்கு வாழ்த்து தெரிவித்த அவர், பிரதமர் மோடியால் மட்டுமே, உலக அரங்கில் இந்தியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக திகழ்வதாகவும், வலிமை மிக்க நாடாக உருவாகியுள்ளதாகவும் கூறினார்.
  • மேலும், பிரதமர் மோடி பல்வேறு சாதனைகளை செய்துள்ளதாகவும், ஆனால் அவர் தோல்வியடைந்து விட்டதாகக் கூறி, அவரை வீழ்த்துவதற்கான முயற்சி நடப்பதாகவும் தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உக்ரைன் மீது ரஷியா நடத்திய ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்

  • உக்ரைன் மீது ரஷியா நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். மேலும், 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ரஷ்ய தாக்குதலில் தலைநகர் கீவ் மட்டுமின்றி, செர்னிஹிவ், கிரெமென்சுக், ஒலெக்சாண்ட்ரியா உள்ளிட்ட 11 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
  • செர்னிஹிவ் பிராந்தியத்தில் உள்ள பிரிலுகி நகரில் குடியிருப்பு கட்டடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும், சுமார் 50 பேர் படுகாயமடைந்தனர்.தலைநகர் கீவில் 2 பேரும், கிரெமென்சுக் நகரில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.

ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி

  • 2023 அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 3-வது ஆண்டாக இஸ்ரேலில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முக்கிய அரசியல் கட்சியினரும் இந்த நினைவு தினத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
  • காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 2023 அக்டோபர் 7-ம் தேதி அதிகாலை இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 251 பேரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.


Related Link
ஈரான் போர் விரைவில் முடியும்: எண்ணெய் விலை குறையும்

ஈரான் போர் விரைவில் முடியும்: எண்ணெய் விலை குறையும்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

’இந்த பார் இனி எங்களுக்குத்தான், குடும்பத்தையே தீர்த்துக் கட்டுவோம்’

33
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved