Also Watch
Read this
By: Manigandan Raja

பயிற்சி முடித்து திரும்பிய போது விழுந்து நொறுங்கிய விமானம்
மேற்கு ஜெர்மனியில் உள்ள அமெரிக்காவின் ஸ்பாங்டால்ஹெம் ((Spangdahlem)) விமானப்படை தளத்தைச் சேர்ந்த F-16 ரக போர் விமானம் ஒன்று, வழக்கமான பயிற்சியை முடித்து திரும்பிய போது விபத்துக்குள்ளானது.
விமானத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேறிய விமானி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க ராணுவம் விசாரித்து வருகிறது.
அமைதி ஒப்பந்தம் செய்யாவிட்டால் ஈரானை அழித்து விடுவேன்
நிபந்தனைகளுக்கு உடன்பட்டு ஈரான் அமைதி ஒப்பந்தம் செய்யாவிட்டால் அதனை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். நியூயார்க்கில் நடந்த ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பேசிய டிரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

இந்த கடுமையான மிரட்டலுக்கு மத்தியிலும், அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகளுக்கு இடையே சுமார் 3 மணி நேரம் ஒரு சுமூகமான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக செய்தியாளர்களிடம் கூறிய டிரம்ப், நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு அல்லது அதற்கு முன்பே கூட ஒரு ஒப்பந்தம் ஏற்படக்கூடும் என்றார்.
கியூபாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி வீழ்ச்சியடையும்
கியூபாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி வீழ்ச்சியடையும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆற்றிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு தூதர்கள் அவையை விட்டு வெளியேறினர். கியூபா அதிபர் மிகேல் டியாஸ்-கனெல், தங்கள் நாட்டின் இறையாண்மையை பாதுகாப்போம் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved