news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அமெரிக்க கடற்படையின் புதிய போர் விமான ஒப்பந்தம்
tv

Also Watch

அமெரிக்க கடற்படையின் புதிய போர் விமான ஒப்பந்தம்

நார்த்ராப்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
USA Space aircraft

20 பில்லியன் டாலருக்கு போயிங் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்தது

அமெரிக்க கடற்படைக்கான அடுத்த தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தை தயாரிக்கும் ஒப்பந்தத்தை போயிங் நிறுவனம் பெற்றுள்ளது. போட்டியில் நார்த்ராப் கிரம்மனை பின்னுக்குத் தள்ளி, சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மேம்பாட்டு ஒப்பந்தத்தை போயிங் கைப்பற்றியுள்ளது.

F/A-XX எனப்படும் இந்த புதிய போர் விமானம், 2030-ம் ஆண்டில் கடற்படை பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் ராணுவம் ஆதரவளித்ததாகக் காபூல் குற்றச்சாட்டு

ஆப்கானிஸ்தானின் நூரிஸ்தான் மாகாணத்தில், பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டி ஊடுருவிய 41 போராளிகள் கொல்லப்பட்டனர். மேலும், 62பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எல்லை தாண்டிய இந்த ஊடுருவலுக்கு பாகிஸ்தான் ராணுவம் ஆதரவளித்ததாகக் காபூல் குற்றம் சாட்டியுள்ளதுடன், இச்சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

பிரேசில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரம்

பிரேசில் அதிபர் தேர்தலில் மொத்த வாக்காளர்களில் 53சதவீதம் உள்ள பெண் வாக்காளர்களைக் கவர அதிபர் லூலா மற்றும் முன்னாள் அதிபரின் மகன் போல்சனாரோ (Bolsonaro) ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ள சூழலில், சம ஊதியம் மற்றும் கடுமையான தண்டனைகள் போன்ற பாதுகாப்பு வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர்.

Related Link
உக்ரைன் முழுவதும் ரஷ்யா வான்வழித் தாக்குதல்: 5 பேர் பலி

உக்ரைன் முழுவதும் ரஷ்யா வான்வழித் தாக்குதல்: 5 பேர் பலி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

2029-க்குள் பஞ்சாப் மாநிலம் போதைப்பொருள் இல்லாத மாநிலம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved