Also Watch
Read this
By: Manigandan Raja

ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான் திட்டவட்டம்
ஆக்கிரமிப்பாளர்கள் முழுமையாக வருந்தப்படும் நிலைக்கு தள்ளப்படும் வரை ஈரான் தனது எதிர்ப்பை வலிமையுடன் தொடரும் என அந்நாட்டு அதிபர் மசூத் பெஷெஷ்கியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ஈரான் அரசு எப்போதும் போரை எதிர்த்து வந்துள்ளதாக தெரிவித்தார். அதேசமயம், ஆக்கிரமிப்புக்கு எதிராக இன்றுவரை எவ்வாறு துணிச்சலுடன் எதிர்த்து வருகிறதோ, அதேபோல ஈரானின் உரிமைகளை பாதுகாக்கும் வரை எதிர்த்து நிற்கும் என்றார்.
பிரிட்டனில் 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
பிரிட்டன் வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, நாடு முழுவதும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக, விமான பயணங்களை கண்காணிக்கும் வலைத்தளமான Flightradar24 தெரிவித்துள்ளது. இதனால், 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

பிரச்சனையை சரிசெய்யும் பணிகள் முழுமை பெற்று வருவதாகவும், விமான அமைப்பு மீண்டு வரத் தொடங்கியுள்ளதாகவும் பிரிட்டனின் தேசிய வான்வழி போக்குவரத்து சேவை தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved