Also Watch
Read this
By: Web Team

ஃபுஜி எரிமலை வெடித்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை விளக்கும் வகையில் ஜப்பானிய அரசாங்கம் ஏஐ வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. எரிமலை வெடித்த அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் டோக்கியோவில் சாம்பல் விழத் தொடங்கும் என்றும், 2 முதல் 10 சென்டி மீட்டர் அளவிற்கு சாம்பல் குவியும் என்றும் வீடியோ தெரிவிக்கிறது.
டோக்கியோவின் மேற்கு பகுதியில் 30 சென்டி மீட்டர் வரை சாம்பல் காணப்படலாம் என்றும், ரயில் பாதைகள் மற்றும் ஓடுபாதைகளில் சாம்பல் குவிந்து ரயில்கள், விமானங்களை நிறுத்தும் என்றும் வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரமான சாம்பல் காரணமாக எரிச்சல், சுவாச பிரச்சனைகள், ஆஸ்துமா போன்றவைகளால் மக்கள் பாதிக்கப்படலாம் எனவும் வீடியோ தெரிவிக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved