news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அதிபர் டிரம்ப் பேசியுள்ளது நகைச்சுவையாக அமைந்துள்ளது
tv

Also Watch

அதிபர் டிரம்ப் பேசியுள்ளது நகைச்சுவையாக அமைந்துள்ளது

மூன்றாவது பதவிக்காலம் சிறப்பாக இருக்கும்

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
டிரம்ப்

டிரம்ப் பேச்சுக்கு நெட்டிசன்கள் நகைச்சுவையாக கமெண்ட் 

தமது மூன்றாவது முறை அதிபர் பதவிக்காலம் இன்னும் சிறப்பாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியுள்ளது நகைச்சுவையாக அமைந்துள்ளது. தற்போதுள்ள இரண்டாவது முறை பதவிக்காலம் சிறப்பாக அமைந்துள்ளதாக கூறினார். அமெரிக்காவில் இரண்டு முறைக்கு மேல் ஒருவர் அதிபராக பதவி வகிக்க முடியாது என்ற சூழலில் டிரம்பின் இந்த பேச்சுக்கு நெட்டிசன்கள் நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

ரஷ்யா-உக்ரைன் இடையே வான்வழித் தாக்குதல் 

ரஷ்யா-உக்ரைன் இடையே சனிக்கிழமை நடைபெற்ற வான்வழித் தாக்குதல்களில், இருதரப்பிலும் சேர்த்து குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். ரஷிய ஆக்கிரமிப்பில் உள்ள Zaporizhzhia பகுதியில் சுற்றுலா முகாம்கள் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். உக்ரைனின் சுமி பிராந்தியத்தில் ரஷியாவின் ட்ரோன் தாக்கியதில் 3 ஓட்டுநர்கள் பலியானார்கள்.

ஸ்பெயின், பிரான்சில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ 

ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், பிரான்சில் காட்டுத்தீயின் கோரத்தாண்டவத்தால், இரு நாட்டிலும், 2 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் பற்றிய காட்டுத்தீயில், 25,000 ஏக்கர் நிலப்பரப்பும், அண்டை மாகாணமான ஆவிலாவில், 37,000 ஏக்கர் நிலப்பரப்பும் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

6
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved