Also Watch
Read this
By: Manigandan Raja

தங்கச் சுரங்கம் சரிந்து விழுந்து 82 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
சூடானில் தங்கச் சுரங்கம் சரிந்து விழுந்ததில் 82 பேர் உயிரிழந்த நிலையில், மாயமான மற்றவர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். மேற்கு கோர்டோபனில் எல் நஹொட் நகருக்கு அருகில் அமைந்துள்ள அல் சாரா என்ற தங்கச் சுரங்கத்தில் 100-க்கும் மேற்பட்டோர் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, திடீரென சுரங்கத்தின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் 82 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயங்களுடன் உயிர் பிழைத்தனர். தகவலறிந்த மீட்புக் குழுவினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காசாவில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து 20 பேர் பலி
காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் சேதமடைந்த அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 20 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் போரின்போது காசா நகரில் கடுமையாக சேதமடைந்த 6 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமானோர் வசித்து வந்தனர்.

அந்த கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில், அங்கு வசித்து வந்த ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து, அக்கம்பக்கத்தினரும், மீட்புக் குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டபோது, 5 குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழந்தது தெரியவந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved