

வரும் ஜனவரி 1 முதல் தங்களது அனைத்து மாடல் கார்களின் விலையையும் 2 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக ஆடி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருவதால் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் 1 தேதியும் ஆடி நிறுவனம் தனது கார்களின் விலையை 2 சதவீதம் வரை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.