இட்லி, சாம்பார் வீடியோவால் மீண்டும் பஞ்சாயத்து - விமர்சிக்கும் நெட்டிசன்கள்

முத்துக்குமரன் - வாஹிதா விவகாரத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் வீடியோக்களால் சோஷியல் மீடியா விவாத மேடையாக மாறியிருக்கிறது.
முத்துக்குமரன்
பிக்பாஸ் பிரபலம்நியூஸ்தமிழ்24x7
Published on: 

ஏற்கனவே இருவருக்கும் இடையே சர்ச்சை நீடித்து வரும் நிலையில், முத்துக்குமரனின் தீபாவளி ஸ்பெஷல் இட்லி, சாம்பார் வீடியோ தற்போது புதிய விவாதத்தை கிளப்பியிருக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வாஹிதாவும் மீண்டும் வீடியோ வெளியிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பதிலடி
தீபாவளி வீடியோநியூஸ்தமிழ்24x7

பிக்பாஸ் பிரபலம்

பிக்பாஸ் முத்துக்குமரன் விவகாரம் முடிய போகிறதா? இல்லை, இன்னும் பல எபிசோடுகள் தொடர போகிறதா? என்ற கேள்விதான் தற்போது சமூக வலைதளங்களில் எழுந்திருக்கிறது. ஒரு பக்கம் முத்துக்குமரன் வீடியோ வெளியிடுகிறார். இன்னொரு பக்கம் வாஹிதா பதிலுக்கு வீடியோ வெளியிடுகிறார்.

இதற்கு இடையில், நெட்டிசன்கள் கமெண்ட் பகுதியில் கேள்விகளை குவித்து வருகின்றனர். ஆக மொத்தத்தில், இந்த விவகாரத்தில் வீடியோவுக்கு வீடியோ, பதிலடிக்கு பதிலடி என்பது மட்டும் குறைந்தபாடில்லை.

திருமண ஆசை காட்டி மோசடி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான முத்துக்குமரன் மீது, திருமண ஆசை காட்டி தன்னை ஏமாற்றியதாக வாஹிதா ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகள் வெளியானதும் சோஷியல் மீடியாக்களில் பெரும் விவாதமே நடந்தது.

இதற்கு இடையே, முத்துக்குமரன் தரப்பிலும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வருவதற்குள் அடுத்தடுத்த வீடியோக்கள் வெளியாகி மீண்டும் பேசுபொருளாகி வருகிறது.

வைரல்
விவாதம் நியூஸ்தமிழ்24x7

தீபாவளிக்கு வீடியோ

அந்த வகையில், தீபாவளியையொட்டி முத்துக்குமரன் வெளியிட்ட வீடியோவும் தற்போது கவனம் பெற்றிருக்கிறது. அந்த வீடியோவில், வழக்கமாக தீபாவளி நாளில் விதவிதமான அசைவ உணவுகளை சாப்பிடுவேன் என்றும், தற்போது தனக்கு நேரம் சரியில்லாததால் இட்லி, சாம்பார் மட்டுமே சாப்பிடுவதாகவும் கூறியிருந்தார்.

வழக்கமான தீபாவளி வாழ்த்துகளுடன் வெளியான இந்த வீடியோ, ஏற்கனவே சர்ச்சையில் இருக்கும் நிலையில்,முத்துக்குமரனின் வீடியோவுக்கு கீழே, வாஹிதா முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில்? என கேள்வி எழுப்பி வருகின்றன.

சிலர் வாஹிதாவுக்கு ஆதரவாகவும், இன்னும் சிலர் முத்துக்குமரனுக்கு ஆதரவாகவும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

பதிலுக்கு பதில் வீடியோ

இப்படி கமெண்ட் பகுதியில் விவாதம் ஓடிக்கொண்டிருக்க, முத்துக்குமரனின் வீடியோவை பார்த்த வாஹிதா மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில் செல்போன் திரையை பார்த்து காரி துப்புவது போன்ற செய்கையை செய்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அதோடு, இட்லி வீடியோவுக்கு பதில் என்ற பொருளில் கேப்ஷனும் கொடுத்திருக்கிறார்.

சரமாரி கேள்வி
முத்துக்குமரன்நியூஸ்தமிழ்24x7

கருத்து மேல் கருத்து

ஒரு தரப்பினர், இந்த விவகாரத்தில் முதலில் உண்மை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்கின்றனர். இன்னொரு தரப்பினர், ஒவ்வொரு வீடியோவுக்கும் இன்னொரு வீடியோ என்று போனால் இந்த விவகாரம் எப்போது முடியும்? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

சிலர் வாஹிதா தனது குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும் என்றும், முத்துக்குமரனும் தனது தரப்பில் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வைரல்
விவாதம்நியூஸ்தமிழ்24x7
முத்துக்குமரன்
முத்துக்குமரனை காரி உமிழ்ந்த வாஹிதா - என்ன நடந்தது?