Part time teachers protest
Part time teachers protest

பணி நிரந்தரம் வேண்டி பகுதி நேர ஆசிரியர் போராட்டம்..!

பல வருடங்களாக பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் தொடர்கிறது காரணம் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்..!
Published on: 

பல வருடங்களாக பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் தொடர்கிறது காரணம் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்..!

2012:
2012ம் ஆண்டு 16,549 ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் ஆதிமுக ஆட்சியின் போது நியமிக்கப்பட்டனர்.

நடுநிலை பள்ளி முதல் உயர் நிலை பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கும் திறன் கொண்ட பகுதி நேர ஆசிரியாராக தேர்ந்தெடுக்கப்பட்டனர் .

ஆரம்ப மாத சம்பளமாக 5௦௦௦ ரூபாய் வழங்கப்பட்டது ஆட்சேர்ப்பு முறையில் பணி நிரந்தர முறையில் எடுத்தாலும் அவரக்ளுக்கு நிரந்தர அந்தஸ்தோ அல்லது PF,ESI போனற எந்த சலுகைகளும் வழங்கப்பட வில்லை.

அவர்கள் வாரத்தில் மூன்று அரை நாட்கள் வேலை செய்தனர் மே விடுமுறை நாட்களில் சம்பளம் பெறவில்லை..!

அதற்கு பிறகு சம்பளம் 12,5௦௦ உயர்த்தப்பட்டது பனி நிரந்தரம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு நிகரான ஊதியம் வழங்கவில்லை  வேலையும் அதிகம் மற்றும் பணி நிரந்தரம் செய்ய கோரி போராட்டம் பல நடத்தினர்.

2021 : 

2021  திமுக தேர்தல் வாக்குறுதிகளில் பகுதி நேர ஆசிரியர்கள் பனி நிரந்தரம் செய்யப்படும் என்று கூறி இருந்தனர் அனால் இது வரை செயல்படுத்தவில்லை என்று தொடர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர்.

2025 : 

இன்றைய ஜூலை 19,2025 வரை போராட்டம் தொடர்ந்து கொண்டு தான் வருகிறது தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர் கூட்டமைப்பு (TNPTF) மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் 12,000 ஆசிரியர்களின் பணிகளை முறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.

பல வருடங்கள் பணியாற்றிய போதிலும் ஊதியம் அதிகரிக்கவில்லை என்று தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர் கூட்டமைப்பு (TNPTF) கூறியுள்ளது.

newstamil.tv