ஏழு நாட்களில் ஏழு சம்பவங்கள், நடுங்க வைக்கும் பின்னணி

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நாள் ஒன்றுக்கு ஒரு கொ* என ஒரு வாரத்தில் 7 கொ*கள் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எந்தெந்த பகுதியில் நடந்துள்ளது? யார் யார் கொ* செய்யப்பட்டுள்ளனர்? எதற்காக நடந்தது? குற்றவாளிகள் சிக்கினார்களா? சம்பவத்தின் நோக்கம் என்ன?
தூத்துக்குடி
Published on: 

சம்பவம்-1

தூத்துக்குடி மாவட்டம், வில்லிகுடியிருப்பைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் கடந்த 22ஆம் தேதி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் பங்கேற்றுவிட்டு அதிகாலை 2 மணிக்குமேல் மகிஷா சூரசம்காரம் நடைபெறக்கூடிய கடற்கரை அருகில் உள்ள பூங்கா சாலை வழியாக பழுதான தனது இருசக்கர வாகனத்தை உருட்டிக்கொண்டே வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த சிலர், வழிப்பறியில் ஈடுபட்டு பைக் சாவியை பறித்ததாக தெரிகிறது. இதுகுறித்து, செல்போனில் சதீஷ்குமார் அளித்த தகவலின்பேரில் அங்கு வந்த அவரது தம்பியான 26 வயதான எலக்ட்ரீஷியன் வேல்முருகனை எதிர்தரப்பினர் கல்லால் தாக்கி கொ* செய்தனர். இதுதொடர்பாக திரேஸ்புரத்தை சேர்ந்த காளிராஜ் மற்றும் 2 சிறுவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லால் தாக்கி...
வேல்முருகன்நியூஸ்தமிழ்24x7

சம்பவம்-2

முதலூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்த 32 வயதான பரோட்டா மாஸ்டர் ஞானபிரகாஷ் காதலித்துள்ளார். வயது வித்தியாசத்தை காரணம்காட்டி எதிர்ப்பு தெரிவித்த சிறுமியின் தாய் மேரி ரெஜிலாவை கடந்த 23ஆம் தேதி கத்தியால் குத்திக்கொ* செய்த பரோட்டா மாஸ்டர் அவரது தந்தை மற்றும் தம்பியையும் நள்ளிரவில் அரிவாளால் வெட்டி அலற வைத்தார்.

இதுமட்டுமல்லாது, சிறுமியையும் அவரது தங்கையையும் சினிமா பாணியில் கடத்தி சென்று தன் வீட்டிலேயே அடைத்து வைத்தார் பரோட்டா மாஸ்டர். சம்பவம் நடந்த சிலமணி நேரத்திலேயே பரோட்டா மாஸ்டர் கைது செய்யப்பட்டாலும் அதன் தாக்கம் அந்த பகுதியில் இன்னும் குறையவில்லை.

மேரி ரெஜிலா
பரோட்டா மாஸ்டர் கைதுநியூஸ்தமிழ்24x7

சம்பவம்-3

திரேஸ்புரம் முத்தரையர் காலனி கடற்கரையை சேர்ந்த நண்பர்களான பழனியும், அதே பகுதியை சேர்ந்த செந்தில்வேலும் கடந்த 24ஆம் தேதி மது அருந்திய நிலையில் பேசிக் கொண்டிருந்தனர். போதையில் சலம்பிய இருவருக்கும் காரணமின்றி வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகி உள்ளது. அப்போது, பழனி கல்லால் தாக்க, பதிலுக்கு அவரை கத்தியால் குத்திக் கொ* செய்தார் செந்தில்வேல். அதன்பிறகு, காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார் செந்தில்வேல்.

பழனி
மது போதையில்நியூஸ்தமிழ்24x7

சம்பவம்-4

ஏரல் அருகே திருவெழுதிநாடார்விளையை சேர்ந்தவர் லாரி டிரைவர் தனுஷ்கோடி. இவரது 14 வயது மகளை கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் வீடுபுகுந்து கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து தனுஷ்கோடி போலீசில் புகார் அளித்திருந்த நிலையில் கடந்த 25ஆம் தேதியும் அதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, இரும்பு, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் அஜித்குமாரின் உறவினர்கள் தாக்கி உள்ளனர். இதில் தனுஷ்கோடி உயிரிழந்தார்.

தனுஷ்கோடி
கிண்டல்நியூஸ்தமிழ்24x7

சம்பவம்-5

ஆழ்வார்கற்குளத்தில் சேர்ந்த மாரியப்பன் குடும்பத்தினருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் குடும்பத்தினருக்கும் இடையே வீட்டின் முன்பு கழிவுநீர் ஓடுவது தொடர்பாக நீண்ட நாட்களாக முன்விரோதம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 26ஆம் தேதி அப்பகுதியில் உள்ள கோவிலில் நடந்த திருவிளக்கு பூஜையின்போது இருதரப்பினருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, இருதரப்பினரும் கத்தி, வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில் மாரியப்பனின் மகன் இசக்கிராஜா பரிதாபமாக உயிரிழந்தார். 20 வயதான இசக்கிராஜா கல்லூரி 2ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

இசக்கிராஜா
முன் விரோதம்நியூஸ்தமிழ்24x7

சம்பவம்-6

சங்கரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த காளிராஜ் திட்டங்குளத்தில் உள்ள தனியார் தினசரி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். இவர், 27ஆம் தேதி அதிகாலை தூங்கி கொண்டிருந்தபோது அங்கு சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வரும் அஞ்சரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னத்துரை என்பவர் கோடாரியால் வெட்டிக் கொ* செய்துவிட்டு கொப்பம்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

காளிராஜ்
உருவ கேலியால்...

அதன்பிறகு நடந்த விசாரணையில், காளிராஜ் சின்னதுரையை அடிக்கடி உருவகேலி செய்ததும், அதுதொடர்பாக ஏற்பட்ட சண்டையில் பலரது முன்னிலையில் கீழே தள்ளி அவமானப்படுத்தியதும்தான் கொ*க்கு காரணம் என்பது தெரியவந்தது.

சம்பவம்-7

தூத்துக்குடி கந்தன் காலனி பகுதியில் வீட்டில் தனியாக இருந்த சசிகலா என்ற பெண்ணை மர்மநபர் அரிவாளால் வெட்டிக்கொ* செய்துவிட்டு தப்பி ஓடினார். சிசிடிவி கேமரா மூலம் தேடுதல்வேட்டையில் ஈடுபட்ட போலீசாருக்கு சசிகலாவின் சொந்த தங்கை மகனான விக்னேஷ் குமாரே நகைக்காக கொ* செய்தது தெரியவந்தது. அதன்பிறகு, அவரை கைது செய்த போலீசார் தங்கச்செயின் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.

சசிகலா
தங்க நகைக்காக...

இப்படி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மாவட்டத்தில் 7 கொ*கள் நடந்துள்ளதற்கு காரணம் சட்டம் ஒழுங்கு சரியில்லை என கொந்தளிக்கும் மக்கள் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் தினம் ஒரு கொ* என்ற கொடூர சம்பவங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி
தூங்கா நகரத்தை மிரள வைத்த கிரைம்
newstamil.tv