அன்பில் மகேஷ் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை நவம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அன்பில் மகேஷ்
Published on: 

காவல்துறை சார்பில் அவகாசம் கேட்கப்பட்ட நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்பில் மகேஷை காவலில் எடுக்க கோரிய போலீசாரின் மனுவும் நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஒத்திவைப்பு
அன்பில் மகேஷ் நியூஸ்தமிழ்24x7

நீதிமன்றத்தில் சரண்

முத்துக்குமார் சரண்
மோசடி புகார் நியூஸ்தமிழ்24x7

நூறு கோடி ரூபாய் மோசடி புகாரில் தலைமறைவாக இருந்த அன்பில் மகேஷ் உதவியாளர், முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். உச்சநீதிமன்றம் சென்றும் முன்ஜாமீன் மறுக்கப்பட்டதை அடுத்து சரணடைந்து உள்ளார்.

டீட்டா சரவணனுக்கு ஜாமீன்

டீட்டா சரவணன்
அன்பில் மகேஷ் நண்பர்நியூஸ்தமிழ்24x7

கரூர் நெரிசல் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. கரூர் கூட்ட நெரிசல் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

K.N.நேரு வீட்டில் ரெய்டு

ரெய்டு
கே.என்.நேருநியூஸ்தமிழ்24x7

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் திருச்சி தில்லை நகர் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். நேரு மீதான ரூ.634 கோடி மோசடி புகார் தொடர்பாக சோதனை எனத் தகவல் வெளியாகி உள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு

ஆர்ஏ புரத்தில் ரெய்டு
லஞ்ச ஒழிப்புத்துறைநியூஸ்தமிழ்24x7

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடைபெற்ற நிலையில், அவரது சகோதரர் ரவிச்சந்திரனின் சென்னை R.A.புரம் இல்லத்திலும் ரெய்டு நடைபெற்றது. கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி மோசடி புகார் தொடர்பாக சோதனை என தகவல் வெளியாகி உள்ளது.

கோவையிலும் ரெய்டு

ரெய்டு
கோவை

கோவையில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய 2 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சிங்காநல்லூர் அருகேயுள்ள கே.என்.நேருவின் சகோதரருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடந்தது. ஜி.வி.ரெசிடென்சி பகுதியில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் ரெய்டு நடைபெற்றது.

அன்பில் மகேஷ்
கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் ரெய்டு
newstamil.tv