வங்கக்கடலில் உருவான முரசு புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்றது

வங்கக்கடலில் உருவான முரசு புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்று வடதமிழக கடற்கரையில் மையம் கொண்டுள்ளது.
வலுப்பெற்றது
முரசு புயல்நியூஸ்தமிழ்24x7
Published on: 

வலுப்பெற்றது முரசு

வங்கக்கடலில் உருவான முரசு புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்று வடதமிழக கடற்கரையில் மையம் கொண்டுள்ளது. இன்று மாலை ஆந்திராவின் நெல்லூருக்கு தெற்கே கரையை கடக்க உள்ளது என்று, தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தகவல் தெரிவித்துள்ளார்.

ஹேமச்சந்தர் தகவல்
முரசு புயல் நியூஸ்தமிழ்24x7

இன்று விடுமுறை

வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயலால் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

முரசு புயல்
விடுமுறை அறிவிப்பு நியூஸ்தமிழ்24x7

பொது மக்களுக்கு எச்சரிக்கை

முரசு புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் மக்கள் மின்கம்பங்கள், அறுந்து விழுந்த மின்கம்பிகள் அருகே செல்ல வேண்டாம். குடிநீர், மருந்துகள், டார்ச் லைட் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தயாராக வைத்திருக்கவும். அவசர உதவிக்கு மாநில அளவில் 1070 என்ற எண், மாவட்ட அளவில் 1077 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்

பதற்றமடையாமல் விழிப்புடன் இருக்க வேண்டும், அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

புயல் எதிரொலி
எச்சரிக்கையாக இருங்கள்நியூஸ்தமிழ்24x7

புயல் கிளம்பி விட்டது

முரசு புயல், கரையை நெருங்கி வரும் நிலையில் மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நவம்பர் 4ஆம் தேதி காலை வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்; மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும். கடற்கரை மற்றும் கடலோரச் சாலைகளுக்குச் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன் எச்சரிக்கை
விழிப்புணர்வுநியூஸ்தமிழ்24x7

விமான சேவை ரத்து

முரசு புயல் காரணமாக சென்னையில் இருந்து இயக்கப்படும் 11 விமானங்களின் சேவை ரத்தாகி உள்ளது. சென்னை-விஜயவாடா, சென்னை-கடப்பா, சென்னை-திருச்சி, விஜயவாடா-சென்னை, கடப்பா-சென்னை, ராஜமுந்திரி-சென்னை, திருச்சி-சென்னை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

11 விமானங்கள்
விமானசேவை ரத்துநியூஸ்தமிழ்24x7

எச்சரிக்கை கூண்டு

முரசு புயல் எதிரொலியாக சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், புதுச்சேரி ஆகிய 5 துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கூண்டு ஏற்றம்
புயல் எச்சரிக்கைநியூஸ்தமிழ்24x7

தேர்வு தள்ளிவைப்பு

முரசு புயல் காரணமாக சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் சென்னை பல்கலை. தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சென்னை பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

சென்னை பல்கலை.
தேர்வுகள் எப்போது?நியூஸ்தமிழ்24x7
வலுப்பெற்றது
இன்றைய 100 முக்கியச் செய்திகள்