

மதுரை தனிஷ்க் நகைக்கடையில் கொள்ளையிட்டு தலைமறைவாக இருந்த நிஷாந்த் காவல்துறையினரால் கைதானார்.
தருமபுாி மாவட்டம் தேசம்பட்டி பகுதியில் தலைமறைவாக இருந்த நிஷாந்த்தை சுற்றிவளைத்து பிடித்த தனிப்படை, மதுரைக்கு அழைத்து வந்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.
மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளையன் நிஷாந்த் பிடிபட்டது குறித்து வெளியான பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் சொகுசு பேருந்தில் நிஷாந்த் பயணம் மேற்கொண்ட போது, மாஸ்க் மற்றும் தொப்பியுடன் வந்த அவரை பார்த்து சந்தேகமடைந்த நடத்துனர் போலீசாருக்கு தகவல் கூறி உள்ளார்.
அதியமான் கோட்டை காவல்துறையினா் சேஷம்பட்டி என்ற இடத்தில் பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, பேருந்தின் ஜன்னல் வழியாக தப்பி ஓட முயன்ற நிஷாந்த்தை சுற்றிவளைத்து பிடித்து காவல்துறையினர் கைது செய்தனர்.
வீடியோவைக் காண...