

எதிரணி வீரருக்கு வாழ்த்து
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை படைத்தார் நியூசிலாந்தின் பந்து வீச்சாளர் மேட் ஹென்றி. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ரன் எதுவும் கொடுக்காமல், கோலி, ரோகித் சர்மா, சிரயேஸ் அய்யர் ஆகியோரை வீழ்த்தினார்.
ஒப்பந்தம் கையெழுத்து
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே கூடைப்பந்து விளையாட்டில் புதிய மைல்கல்லாக இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு நாடுகளுக்கு இடையேயான விளையாட்டு தொடர்புகளை வலுப்படுத்துவது, பயிற்சியாளர்கள், நடுவர்கள் மற்றும் வீரர்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் 3 ஆண்டுகளுக்கு கூட்டாண்மைக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.