

மும்பையில் நடைபெற்ற குளோபல் பீஸ் ஹானர்ஸ் 2026 நிகழ்ச்சி
பொதுமேடையில் நடனமாடி நடிகர் டைகர் ஷெராஃப் மேடையில் நுழைந்த நாயால் சிரிப்பலை
குளோபல் பீஸ் ஹானர்ஸ் 2026 (Global Peace Honours 2026) நிகழ்வின் மூன்றாவது பதிப்பு நவம்பர் 21, 2026 அன்று மும்பை கேட்வே ஆஃப் இந்தியாவில் நடைபெற்றது.
26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் 18-ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, தியாகிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் துணிச்சலைப் போற்றும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது
பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராஃப்பின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்களின் வீடியோ காட்சி வெளியானது. மும்பையின் ஜூஹு பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்தில், இரண்டு பேர் காரை நோக்கிச் சுட்டுவிட்டு, மூன்றாவது நபருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றது வீடியோவில் பதிவாகியுள்ளது.
மும்பையில் நடைபெற்ற குளோபல் பீஸ் ஹானர்ஸ் 2026 நிகழ்ச்சியில், நடிகர் டைகர் ஷெராஃப் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு முதன்முறையாகப் பொதுமேடையில் நடனமாடினார்.
அப்போது திடீரென நாய் ஒன்று மேடைக்குள் நுழைந்ததால் அங்கிருந்தவர்கள் சிரிப்பலையில் மூழ்கினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.