Dhanush
Dhanush

மகளிர் அணி நிர்வாகிகளை சந்தித்து புகைப்படம் எடுக்கிறார் தனுஷ்

மீண்டும் ஒரு நற்பணி மன்ற நிர்வாகிகள் சந்திப்பை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
Published on: 

வரும் ஞாயிறன்று சந்திப்பு நடைபெறும் என தகவல்

  • நடிகர் தனுஷின் பிறந்த நாளுக்கு முன்பாக சென்னையில் மிகப்பெரிய ரசிகர் மன்ற சந்திப்பை நடத்தி இருந்தார். அங்கு அவர் பேசிய மேடைப்பேச்சு அரசியல் வருகைக்கான அடித்தளமாக இருந்தது என்று சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறியது.
    நடிகர் தனுஷ் நேற்றைய தினம் டெல்லி சென்றது பேசு பொருளாக மாறி இருக்கக்கூடிய நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஒரு நற்பணி மன்ற நிர்வாகிகள் சந்திப்பை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
    இந்த சந்திப்பில் தனுஷ் நற்பணி மன்றத்தில் உள்ள மகளிர் அணி நிர்வாகிகள் முழுவதுமாக கலந்து கொண்டு நடிகர் தனுஷ் உடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
newstamil.tv