’என் மகள் குடிகாரியா?’ - கொதித்த நடிகர் அர்ஜூன்

மிதமிஞ்சிய மதுப் பழக்கம் காரணமாக கணவர் உமாபதி ராமைய்யாவை பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக நடிகை ஐஸ்வர்யா அர்ஜூன் குறித்து கசிந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்த ஆக்சன் கிங் அர்ஜூன், தனது மகளுக்கு எதிராக அவதூறு பரப்புவோருக்கு எதிராக போலீசில் புகார் அளித்திருப்பதாக விளக்கம் அளித்தார்.
’என் மகள் குடிகாரியா?’
நடிகர் அர்ஜூன்நியூஸ்தமிழ்24x7
Published on: 

மகளுக்காக அர்ஜூன் ஆவேசப்பட காரணம் என்ன? ஐஸ்வர்யா அர்ஜூன் குறித்து பரவிய தகவல் உண்மையா?

நடிகை உடன் தொடர்பா?
மதுப்பழக்கமா?நியூஸ்தமிழ்24x7

நடிகர் அர்ஜூன் ஆவேசம்...

படத்தில் ஆக்சன் கிங்காக 10 பேரை அடித்து துவம்சம் செய்த அர்ஜூன், மகளுக்கு எதிராக கண்டபடி பரவும் வதந்திகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் மனம் நொந்து வெளியிட்ட அறிக்கை தான் கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது.

ஊர்சுற்றினார்களா?
உமாபதி - யாஷிகாநியூஸ்தமிழ்24x7

நடிகர் அர்ஜூனின் மகளான ஐஸ்வர்யாவுக்கும், தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதி ராமய்யாவுக்கும் கடந்த 2024ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவரும் காதலித்து வந்த நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் சென்னை கெருகம்பாக்கத்தில் அர்ஜூனுக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது.

ஆனால், சில நாட்களாகவே ஐஸ்வர்யா அர்ஜூன் - உமாபதி ராமைய்யா தம்பதி குறித்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

உலா வரும் தகவல் என்ன?

அதாவது, ஐஸ்வர்யாவுக்கும், உமாபதிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக சொல்லப்பட்டதோடு, உமாபதியையும், நடிகை யாஷிகாவையும் தொடர்புபடுத்தி யூகங்கள் கிளம்பின. உமாபதி ராமையாவும், யாஷிகாவும் இணைந்து, ‘மணியார் குடும்பம்’ என்ற படத்தில் நடித்திருக்கும் நிலையில், அப்போதே இருவரும் நெருக்கமாக இருப்பதாக சொல்லப்பட்டது.

இருவரும் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடியது, வெளியே ஊர் சுற்றிய புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களுக்கு தீனி போட்டது.

மதுப்பழக்கம்
நடிகை உடன் தொடர்புநியூஸ்தமிழ்24x7

நடிகையுடன் தொடர்பா? மதுப்பழக்கமா?

இதனிடையே, ஐஸ்வர்யா உடனான திருமணத்திற்கு பிறகும் உமாபதி, யாஷிகா உடனான பழக்க வழக்கத்தை நிறுத்தாததால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விரைவில் விவாகரத்து அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்பட்டது. இதனிடையே, ஐஸ்வர்யாவின் மித மிஞ்சிய மதுப்பழக்கத்தால் தான் இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டது என புது தகவலும் உலா வந்தது.

களங்கம் ஏற்படுத்தி விட முடியாது

போதாக்குறைக்கு, இத்தாலியில் நடைபெற்ற அர்ஜூனின் இளைய மகள் அஞ்சனாவின் திருமண புகைப்படங்களில் உமாபதி ராமய்யா இல்லாததும் சர்ச்சையை உறுதிபடுத்தும் வகையில் இருந்தது.

இந்த நிலையில் தான், அர்ஜூனிடம் இருந்து நீண்ட நெடிய விளக்க அறிக்கை வெளியாகியுள்ளது. இளைய மகள் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி எனக் குறிப்பிட்டு அறிக்கையை தொடங்கியிருக்கும் அர்ஜூன், மூத்த மகள் குறித்து பரவும் யூகங்களுக்கு அவரே பதிலளிப்பார் என நினைத்து இத்தனை நாட்களாக அமைதியாக இருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.

ஆவேசம்
அர்ஜூன் அறிக்கை நியூஸ்தமிழ்24x7

ஆனால், ஒரு தந்தையாக தனது மகளுக்கு எதிராக ஆதாரமற்ற இழிவான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது என்ற அர்ஜூன், நடிகர்கள் என்பதற்காக யார் வேண்டுமானாலும் பொய் கதைகளை புனைந்து நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட முடியாது எனக் கூறியிருக்கிறார்.

உமாபதி ராமய்யா
அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா நியூஸ்தமிழ்24x7

போலீசில் அர்ஜூன் புகார்

எந்த வித ஆதாரமும் இல்லாமல் தனது மகள் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானவர் என முத்திரை குத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறியிருக்கும் அர்ஜூன், அமைதியாக இருக்கிறோம் என்பதற்காக அவதூறுகளை ஏற்றுக் கொண்டதாக அர்த்தம் கிடையாது என கொதித்தெழுந்துள்ளார்.

மேலும், மகளுக்கு எதிராக அவதூறு பரப்பியவர்கள் மீது போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அர்ஜூன் கூறியிருக்கிறார்.

திருமணம்
உமாபதி - ஐஸ்வர்யா நியூஸ்தமிழ்24x7

வீடியோவைக் காண...

’என் மகள் குடிகாரியா?’
மகள் விவகாரத்தில் அர்ஜூன் ஆவேசம், போலீசில் புகார்