

அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகியுள்ள LOCK DOWN திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்லி, நிரோஷா, லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டிசம்பர் 5-ம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.