29
சினிமா
46 வருடங்களுக்கு பின் இணையும் ரஜினி - கமல்?
46 வருடங்களுக்கு பிறகு ரஜினியும் கமலும் இணைந்து நடிக்க உள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
46 வருடங்களுக்கு பிறகு ரஜினியும் கமலும் இணைந்து நடிக்க உள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. விக்ரம் பட சமயத்திலேயே ரஜினி - கமலை ஒன்றாக வைத்து லோகேஷ் கனகராஜ் ஒருபடத்தை இயக்க திட்டமிட்டு இருந்தார்.
ஆனால், கொரோனா பரவல் காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், மீண்டும் அந்த திட்டத்தை கையிலெடுத்துள்ள லோகேஷ், ரஜினி கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
மேலும், இத்திரைப்படத்தை ராஜ் கமல் ஃப்லிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
