Rachal rebekka
Rachal rebekka

"கடைசி விவசாயி"-க்காக சிறந்த துணை நடிகை விருது பெற்றார்

அம்மாவாக நடித்ததுடன், உசிலம்பட்டி வசன உச்சரிப்புகளை அட்டகாசமான உடல்மொழிக்கு கொண்டு வந்து பாராட்டுகளை பெற்று வருகிறார்.
Published on: 

சிறந்த துணை நடிகை விருது பெற்றார் :

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நோக்கி நகர்ந்து வரும் நடிகை ரேச்சல் ரெபெக்கா, கதாபாத்திர தேர்வில் அசத்தி வருகிறார். மருத்துவரான இவர், "கடைசி விவசாயி" திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகை விருதை வென்றார். தற்போது, "தாய்கிழவி" திரைப்படத்தில் ராதிகாவின் மகளாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

அதுவும் பதின்ம வயது மகனுக்கு அம்மாவாக நடித்ததுடன், உசிலம்பட்டி வசன உச்சரிப்புகளை அட்டகாசமான உடல்மொழிக்கு கொண்டு வந்து பாராட்டுகளை பெற்று வருகிறார்.

newstamil.tv