

தமிழ் திரையுலகில் கம்பேக் கொடுத்துள்ள ஸ்ருதிஹாசன், இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் நடிக்க உள்ளார். அருண் விஷ்வாவின் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்பு தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.