Shivraj kumar
Shivraj kumar

சிவராஜ்குமார்-அபிஷன் ஜீவிந் இணைந்து நடிக்கும் படம்

படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Published on: 

புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும்

நடிகர் சிவ ராஜ்குமார் மற்றும் அபிஷன் ஜீவிந் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. டிராமா கம்பெனி தயாரிக்கும் இப்படத்தில் ஷிவானி நாகராம், யோகலட்சுமி கானா வினோத் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தனது ரசிகர் மன்ற தலைவர் இல்ல திருமண விழா

நடிகர் சிவகார்த்திகேயன் தனது ரசிகர் மன்றம் கும்பகோணம் நகர தலைவர் இல்ல திருமண விழாவிற்கு வெளிநாட்டில் இருந்தபடியே தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து வீடியோ கால் மூலம் ரசிகரின் குடும்பத்தினரிடம் பேசிய சிவகார்த்திகேயன், அவரது அம்மாவிடம் நீண்ட நேரம் நலம் விசாரித்தார்.

தனது காதல் மனைவியைப் பிரிந்தது குறித்து வேதனை

ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் விநாயகன், தனது காதல் மனைவியைப் பிரிந்தது குறித்து வேதனை தெரிவித்துள்ளார். 40 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த நிலையில், தனது நடத்தையே பிரிவுக்கு காரணம் என்றும், தங்களுக்கு குழந்தைகள் இல்லை என்றும், இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் பிரிய முடிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

newstamil.tv