Karupu
Karupu

தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் சூர்யாவின் கருப்பு..? கருப்பு படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தகவல்..!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படத்தை வரும் தீபாவளியை முன்னிட்டு வெளியிட முயற்சி நடைபெற்று வருவதாக அப்படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.
Published on: 

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படத்தை வரும் தீபாவளியை முன்னிட்டு வெளியிட முயற்சி நடைபெற்று வருவதாக அப்படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.

திரிஷா கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில், ஸ்வாசிகா, மலையாள நடிகர் இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே படத்தின் டீசரை திரையரங்கில் ரசிகர்களோடு கண்டு களித்த ஆர்.ஜே.பாலாஜி, தீபாவளியை முன்னிட்டு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

newstamil.tv