27
27

கமகமக்கும் மைசூர் சாண்டலின் மாடலான நடிகை தமன்னா.. தமன்னா நியமிக்கப்பட்டதற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு

பிரசித்தி பெற்ற மைசூர் சாண்டல் சோப்-பின் விளம்பர மாடல் மற்றும் தூதராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
Published on: 

பிரசித்தி பெற்ற மைசூர் சாண்டல் சோப்-பின் விளம்பர மாடல் மற்றும் தூதராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

தமன்னாவை இரண்டு ஆண்டுகளுக்கு ஆறு கோடியே 20 லட்சம் ரூபாய் சம்பளத்தில் விளம்பர தூதராக மைசூர் சாண்டலை தயாரிக்கும் கர்நாடக அரசு நிறுவனமான கர்நாடகா சோப்ஸ் அன்ட் டிடர்ஜென்ட் நிறுவனம் நியமித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கன்னட அமைப்பினர், விளம்பர தூதராக இருக்க கன்னட நடிகைகள் யாருக்கும் தகுதி இல்லையா என வினவி உள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள கர்நாடக தொழிற்துறை அமைச்சர் MB பட்டீல், மைசூர் சாண்டலின் புகழ் கர்நாடகாவை தாண்டியும் பரவ வேண்டும் என்பதற்காக தமன்னாவை தேர்வு செய்த தாக தெரிவித்துள்ளார்.

newstamil.tv