

விஷ்ணு விஷால் நடிக்கும் "இரண்டு வானம்" திரைப்படம்
படத்தின் 2-வது பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியீடு
"ஆத்தி என்னால முடியலையே" எனத் தொடங்கும் பாடல்
விஷ்ணு விஷால், மமிதா பைஜு நடிக்கும் "இரண்டு வானம்" திரைப்படத்தின் 2-வது பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
"ஆத்தி என்னால முடியலையே" எனத் தொடங்கும் பாடலுக்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில், டி.ஜி. தியாகராஜன் தயாரித்துள்ளார். இந்த படத்தின் புதிய வெளியீட்டு தேதி விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.