"கிங் 100" படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு

டிசம்பர் 24-ம் தேதி திரைக்கு வரும் "கிங் 100" திரைப்படம்
கிங் 100
கிங் 100
Published on: 

நாகார்ஜுனாவின் 100-வது திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தை தமிழ் இயக்குநர் ரா.கார்த்தி இயக்குகிறார். நாகார்ஜுனா இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு தற்காலிகமாக "கிங் 100" என பெயரிடப்பட்டுள்ளது.

நாகார்ஜுனா
நாகார்ஜுனா

இந்த படத்தை அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படத்தில், அசோக் செல்வன், தபு, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படம் டிசம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.