15
15

தவெக தலைவர் விஜயின் அடுத்த திரைப்படம் இயக்குவது யார்? சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் விவாதம் வைரல்

ஜனநாயகன் தான் தனது கடைசி திரைப்படம் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ள நிலையில், அடுத்த படத்தை இயக்கவிருக்கும் இயக்குநர் யார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதப் பொருளாக மாறியுள்ளது.
Published on: 

ஜனநாயகன் தான் தனது கடைசி திரைப்படம் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ள நிலையில், அடுத்த படத்தை இயக்கவிருக்கும் இயக்குநர் யார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதப் பொருளாக மாறியுள்ளது.

ஏற்கனவே, லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்க்கு ஒரு கதை சொல்லி இருப்பதாகவும், அதுமட்டுமின்றி, அவரை வைத்து ஏற்கனவே வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர்கள் அட்லி, கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரும் விஜய்யிடம் கதை கூறி, ஒப்புதல் வாங்கி காத்திருப்பதாகவும், சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.

இதனிடையே, இயக்குநர் அட்லி, அல்லு அர்ஜுனை வைத்து இயக்கி வரும் திரைப்படத்தில் நடிகர் விஜய் கேமியோ வேடத்தில் வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

newstamil.tv