Will smith
Will smith

ஷாருக் கானுடன் இணைந்து நடிக்க வில் ஸ்மித் விருப்பம்

கடந்த காலத்தில் சல்மான் கான், அமிதாப் பச்சனுடன் கூட இணைந்து நடிப்பது குறித்து பேசியதாக தெரிவித்தார்.
Published on: 

நடிகர் ஷாருக் கானுடன் இணைந்து ஒரு பாலிவுட் திரைப்படத்தில் நடிக்க விரும்புவதாக, ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் விருப்பம் தெரிவித்துள்ளார்.

நேஷனல் ஜியாகிராஃபிக்கின் புதிய தொடரான ​​'போல் டு போல்' பிரீமியர் நிகழ்ச்சிக்காக துபாய் சென்ற அவர், சிவப்பு கம்பள வரவேற்பில் செய்தியாளர்களிடம் பேசிய போது, கடந்த காலத்தில் சல்மான் கான், அமிதாப் பச்சனுடன் கூட இணைந்து நடிப்பது குறித்து பேசியதாக தெரிவித்தார்.

newstamil.tv