ஃபெஞ்சல் புயல் பாதிப்பு-விசிக சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி.. முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கிய தொல்.திருமாவளவன்

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக விசிக சார்பில் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்.
31
31
Published on: 

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக விசிக சார்பில் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2 பேர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேரின் ஒரு மாத ஊதியமான 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனை செல்வன், பனையூர் பாபு, எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷா நவாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்

newstamil.tv