

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சாலையில் நடந்து சென்றவர்களை வெறிநாய் ஒன்று விரட்டி விரட்டி கடித்ததில், 10 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட காட்டூர் மணி நகர் பகுதியில் தெருநாய் ஒன்று வெறி பிடித்து, அவ்வழியாக சென்றவர்களை எல்லாம் துரத்தியுள்ளது.
இதனை அறியாமல் சிலர் அந்த நாயை விரட்ட முயலவே, அவ்வழியாக சென்றவர்களை விரட்டி விரட்டி கடித்தது. மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம் ஊழியர்களை அனுப்பி அந்த நாயை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.