12
12

ஜல்லிக்கட்டு போட்டியின் போது 100 அடி.. ஆழமுள்ள கிணற்றில் விழுந்த காளை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஜல்லிக்கட்டு போட்டியின் போது 100 அடி ஆழமுள்ள கிணற்றில் காளை விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Published on: 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஜல்லிக்கட்டு போட்டியின் போது 100 அடி ஆழமுள்ள கிணற்றில் காளை விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நத்தமாடிபட்டியில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

அப்போது, போட்டியில் கலந்து கொண்டு வீரர்களிடம் பிடிபடாமல் மதுரை திருப்பாலையை சேர்ந்த தினேஷ் என்பவரின் காளை வெற்றி பெற்றது.

பின்னர் எதிர்பாராதவிதமாக ஜல்லிக்கட்டு மைதானத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரமுள்ள தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள சுமார் 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் பொதுமக்கள் உதவியுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கிணற்றுக்குள் நீந்திக்கொண்டிருந்த காளையை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

newstamil.tv