

பதிநான்காவது உலகக் கோப்பை ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டியில் பங்கேற்க மதுரை வந்த கனடா அணிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னையில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்த கனடா அணியினருக்கு, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாலை அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து கரகாட்டம், ஒயிலாட்டம், நாதஸ்வரம் மற்றும் தவில் வாத்தியங்கள் வாசித்து ஹாக்கி வீரர்களை வரவேற்றனர்.