38
மாவட்ட செய்திகள்
பல்லாவரத்தில் ஒரே தண்டவாளத்தில் 2 மின்சார ரயில்கள்.. தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை சென்ற ரயில்
சென்னை பல்லாவரத்தில் ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 8.50 மணியளவில் புறப்பட்ட மின்சார ரயில் பல்லாவரத்தில் நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட தயாரானது.

அப்போது ஆறாவது பெட்டியில் இருந்து புகை வருவதை கண்ட பயணிகள் அலறியடித்து கீழே இறங்கிய போது, அதே தண்டவாளத்தில் சென்னை கடற்கரையை நோக்கி மற்றொரு மின்சார ரயில் வந்தது.
இருப்பினும் ரயில் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, முன்னாள் நின்ற ரயில் வேறு பாதையில் மாற்றப்பட்ட பின்னர் பின்னால் வந்த ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் 30 நிமிடங்கள் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.