பெரியசாமிபுரம், தூத்துக்குடி
மாவட்ட செய்திகள்
கடலில் மூழ்கி கல்லூரி மாணவி உட்பட 2 பெண்கள் பலி.. கடலில் குளித்தபோது அலையில் சிக்கிக்கொண்ட 5 பெண்கள்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கடலில் குளித்து கொண்டிருந்த கல்லூரி மாணவி உட்பட 2 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கடலில் குளித்து கொண்டிருந்த கல்லூரி மாணவி உட்பட 2 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
மதுரையில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர், சொந்த ஊரான பெரியசாமிபுரத்திற்கு கோவில் திருவிழாவுக்காக வந்திருந்தனர்.
திருவிழா முடிந்தபின் அங்குள்ள கடலில் குளித்து கொண்டிருந்தபோது 5 பெண்கள் கடல் அலையில் சிக்கிக் கொண்டனர்.
இதில், கல்லூரி மாணவியான இலக்கியா மற்றும் கன்னியம்மாள் ஆகிய இருவர் உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்ட அனிதா, ஸ்வேதா, முருகலட்சுமி ஆகிய 3 பேருக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

