தென் மாவட்டங்களுக்கு செல்லும் வழியில் உள்ள 4 சுங்கச்சாவடிகள்..

தென் மாவட்டங்களுக்கு செல்லும் வழியில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது என்ற உத்தரவை வரும் 31ம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
25
25
Published on: 

தென் மாவட்டங்களுக்கு செல்லும் வழியில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது என்ற உத்தரவை வரும் 31ம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

கப்பலூர், எட்டூர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய நான்கு சுங்கச்சாவடிகள் வழியாக சென்ற அரசு பேருந்துகளுக்கு செலுத்த வேண்டிய 276 கோடி சுங்கக்கட்டணத்தை இன்னும் செலுத்தவில்லை என கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், சுங்கச்சாவடிகளை நிர்வகிக்கும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் நல்ல தீர்வு எட்டப்படும் எனவும் தெரிவித்தார்.

newstamil.tv