

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தேனி வைகை அணையில் நீர்வரத்து 786 கன அடியாக அதிகரித்துள்ளது.
கடந்த சில வாரங்களாகவே வினாடிக்கு வெறும் 10 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில்,
786 கன அடியாக அதிகரித்து அணையின் நீர்மட்டம் சீராக உயரத் தொடங்கி 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது சுமார் 53 அடியாக உள்ளது.
அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.