

கோவை அருகே கரும்புக்கடை பகுதியில் அதிவேகமாக சென்ற பைக், சாலையை கடக்க முயன்ற குழந்தை மீது மோதிய பதைபதைப்பூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஆசாத் நகர், ஐந்தாவது வீதியில் குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சிறுவர்கள் குழந்தை மீது அதிவேகமாக மோதினர்.