KRR Court judgement
மாவட்ட செய்திகள்
பட்ட பெயர் மாற்றம் செய்ய ரூ.1,500 லஞ்சம் பெற்ற வழக்கு
கிராம நிர்வாக அலுவலர் கதிரேசனை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.
பட்டா பெயர் மாற்றம் செய்ய ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில், கிராம நிர்வாக அலுவலருக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2013- ஆம் ஆண்டில், பெரிய மஞ்சுவெளி கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவரிடம் பட்டா பெயர் மாற்றம் செய்ய, ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சம் பெற்றதாக, கிராம நிர்வாக அலுவலர் கதிரேசனை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.
