அரவக்குறிச்சி, கரூர்
அரவக்குறிச்சி, கரூர்

இனோவா காரில் வந்து ஆடுகளை திருடிய வழக்கு.. பாஜக பிரமுகர் உள்ளிட்ட 3 பேர் கைது

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே ஆடுகளை திருடிய பாஜக பிரமுகர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்த போலீசார், மேலும் இரண்டு பேரை தேடி வருகின்றனர்.
Published on: 

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே ஆடுகளை திருடிய பாஜக பிரமுகர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்த போலீசார், மேலும் இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

கடந்த 27 ஆம் தேதி சென்னை பதிவெண் கொண்ட இனோவா காரில் வந்த 5 நபர்கள் 16 ஆடுகளை திருடி சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கொடைக்கானலை சேர்ந்த பாஜக பிரமுகர் ரஞ்சித், சதீஷ்குமார், சிவகுமார் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்ததோடு, திருட்டுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்

newstamil.tv