மாப்பிள்ளைக்குப்பம், திருவாரூர்
மாப்பிள்ளைக்குப்பம், திருவாரூர்

கட்டுமான தொழிலாளி நெஞ்சில் கம்பியால் குத்திக் கொலை.. சக தொழிலாளியை கைது செய்து போலீசார் விசாரணை

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கட்டுமான தொழிலாளியை நெஞ்சில் கம்பியால் குத்தி கொலை செய்த சக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
Published on: 

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கட்டுமான தொழிலாளியை நெஞ்சில் கம்பியால் குத்தி கொலை செய்த சக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

மாப்பிள்ளைகுப்பம் கைலாசநாதர் கோவில் நடக்கும் திருமண மண்டபம் கட்டுமானப்பணியில் மதுரையிலிருந்து அழைத்து வரப்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலை முடிந்து உணவருந்திய போது மதுரை கொக்குளத்தை சேர்ந்த தொழிலாளர் கிருபாகரனுக்கும், அவரது உறவினர் நிவாசுக்கும் தகராறு ஏற்பட்டது.

நிவாஸ் கம்பியால் குத்தியதில் படுகாயமடைந்த கிருபாகரன் நன்னிலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

newstamil.tv