CGL Murder attempt
CGL Murder attempt

பெருங்களத்தூரில் பா.ஜ.க. நிர்வாகியை வெட்டிய கும்பல்

ரியல் எஸ்டேட் தொழிலில் கமிஷன் தராத ஆத்திரத்தில் தாக்குதல் நடத்தியது தெரியவந்தது
Published on: 

சென்னை பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே பாஜக பிரமுகரை ஓட ஓட விரட்டி பட்டாக் கத்தியால் வெட்டிய கும்பல், இருசக்கர வாகனத்தில் தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
பாஜக நிர்வாகி செந்தில், கடந்த 16ஆம் தேதி நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ரயில் நிலைய சுரங்கப்பாதை அருகே வழிமறித்த நால்வர், அவரை ஓட ஓட விரட்டி வெட்டினர். ரோந்து பணியில் இருந்த போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் இருசக்கர வாகனத்தில் தப்பியது. சிசிடிவி பதிவை வைத்து சுதாகர், நரேஷ், விக்னேஷ், விஜய் ஆகியோரை கைது செய்து விசாரித்ததில், ரியல் எஸ்டேட் தொழிலில் கமிஷன் தராத ஆத்திரத்தில் தாக்குதல் நடத்தியது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

newstamil.tv