NGP Well issue
மாவட்ட செய்திகள்
வலை போட்டு மூடப்பட்டுள்ள ஆழ்குழாய் நீர் தேக்க தொட்டி
குப்பை கூளங்கள், விஷ ஜந்துக்களால் குடிநீர் அசுத்தமாகி உள்ளதாக குற்றச்சாட்டு
நாகப்பட்டினம் மாவட்டம் வடக்காலத்தூரில் சேதமான ஆழ்குழாய் நீர் தேக்க தொட்டி மூடியை சரிசெய்யாமல் வலை போட்டு மூடியிருப்பதால், குப்பை கூளங்கள், விஷ ஜந்துக்களால் குடிநீர் அசுத்தமாகி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் அந்த கிராமத்தில் மக்களின் குடிநீர் தேவைக்காக பிடாரி கோவில் அருகே ஆழ் குழாய் நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
