

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ரவுண்டானா அருகே வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்தவரிடம் கொள்ளையடிக்கப்பட்டதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. ஜெனித் யுவராஹ் நகைகளை அடமானம் வைத்துவிட்டு ஒரு லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டு வண்டியின் டிக்கியில் வைத்த நிலையில், இரு மர்ம நபர்கள் அதனை லாவகமாக எடுத்து சென்றுள்ளனர்.