

இந்தியாவில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் தேர்தல் ஆணையமே திருடனாக மாறிவிட்டதாக திமுக எம்பி ஆ.ராசா கடும் விமர்சனம் செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் திமுக வாக்குச்சவாடி முகவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கான சிறப்பு பயிற்சி பங்கேற்று பேசிய ஆ.ராசா தேர்தல் ஆணையம் திருடன் என்றால், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பெருந்திருடர்கள் எனக் கூறினார். பெருந்திருடர்களிடம் இருந்து ஜனநாயகத்தை காப்பாற்றவே திமுக களத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.