NIL Tiger attack
மாவட்ட செய்திகள்
முதுமலை வனப்பகுதியில் மூதாட்டியை கொன்ற புலி
இதனையடுத்து புலியின் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதிக்குட்பட்ட பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியை, புலி தாக்கி இழுத்து சென்று கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காலை நேரத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நாகி அம்மாள் என்ற மூதாட்டியை புலி இழுத்து சென்றதாக தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர், தலை துண்டாகி கிடந்த நாகி அம்மாளின் சடலத்தை மீட்டனர். இதனையடுத்து புலியின் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
